ஆசிரியரைப் பற்றி
எழுத்துப் பங்களிப்புகள்
- குழந்தைகள் இலக்கியம்
- ஆன்மிக மற்றும் சமய நூல்கள்
- நாவல்கள் மற்றும் சிறுகதைகள்
- கவிதைகள் (ஹைக்கூ கவிதைகள் உட்பட)
- பொது அறிவியல் நூல்கள்
- கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நூல்கள்
- கல்வி மற்றும் பொது அறிவு நூல்கள்
- வாழ்க்கை வரலாறு மற்றும் ஊக்கமளிக்கும் நூல்கள்
The story of
R.V. PATHY
இவர் நான்கு தசாப்தங்களுக்கு நெருங்கிய இலக்கிய அனுபவம் கொண்ட சிறந்த தமிழ் எழுத்தாளர். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இலக்கியத் துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
பல்வேறு வகை இலக்கியங்களில் திறம்படப் படைத்து வரும் சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவராக விளங்குகிறார். சிறார் இலக்கியமே அவரது முதன்மை ஆர்வமாக இருந்தாலும், ஆன்மிக நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், அறிவியல் நூல்கள், கணினி அறிவியல் நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், பொதுஅறிவு நூல்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவரது படைப்புகள் பரவலாக அமைந்துள்ளன. சிக்கலான கருத்துகளையும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கும் அவரது எழுத்து நடை, அனைத்து வயதினரையும் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த வாசகர்களையும் கவர்ந்துள்ளது.
நூல்கள் எழுதியதோடு மட்டுமல்லாமல், பல இதழ்கள் மற்றும் நாளிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 600-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகியுள்ளன. **தினமலர் ஆன்மிகமலர்** இதழில் வெளியான அவரது **“கோவிலும் பிரசாதமும்”** என்ற ஆன்மிகத் தொடர் தொடர்ந்து 32 வாரங்கள் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது **தினமலர் சிறுவர்மலர்** இதழில் ஒவ்வொரு சனிக்கிழமையும் வெளியாகும் **“நாடோடியின் சாகசங்கள்”** என்ற 25 வார சிறார் தொடர் வாசகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.
அவரது எழுத்தின் தனிச்சிறப்பு அதன் எளிமை, தெளிவு மற்றும் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய நடை ஆகும். இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் அவரது படைப்புகளை விரும்பி வாசிக்கின்றனர்.
பல்வேறு கருப்பொருள்களை உள்ளடக்கிய அவரது நூல்கள், தலைமுறைகள் தாண்டி வாசகர்களை சென்றடைந்து, தமிழ் இலக்கியத்திற்கு நிலையான பங்களிப்பை வழங்கி வருகின்றன.
The passion for Children's Literature
பல்வேறு வகையான எழுத்துத்துறைகளில் செயல்பட்டாலும் இவர் விரும்பி செயல்படும் துறை குழந்தை இலக்கியத் துறையாகும். இன்றைய சிறுவர்களே நாளை நாட்டை ஆளப்போகிறவர்கள். அவர்கள் மனதில் நல்ல நல்ல பண்புகளை விதைக்க வேண்டும். அறிவியல் அறிவை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுக்காக சிறுகதை அறிவியல் கணினி என பல்வேறு தலைப்புகளில் நூல்களைப் படைத்து வருகிறார். இதுவரை சிறுவர் சிறுமியருக்காக பிரத்யோகமாக எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
இதழ்களில் வெளியான படைப்புகள்
இவர் எழுதிய முதல் சிறுவர் சிறுகதை “திருந்திய உள்ளங்கள்” என்ற தலைப்பில் 08 ஜனவரி 2016 அன்று தினமணி வெள்ளிமணி இதழில் பிரசுரமானது. தொடர்ந்து தினகரன் வசந்தம், தினமணி சிறுவர்மணி, தினமணி தமிழ்மணி, இளந்தளிர், கோகுலம், தினபூமி மாணவர்பூமி, கலைமகள், பிக்கிக்கா, பெரியார் பிஞ்சு, தினத்தந்தி தங்கமலர், பொம்மி,, தி இந்து தமிழ், மாயாபஜார், என பல, சிறுவர், இதழ்களில், இவர், எழுதிய, நூற்றுக்கும், மேலான, சிறார் கதைகள்,பாடல்கள், சிறார்களுக்கான கட்டுரைகள் தொடர்ந்து பிரசுரமாகி வருகின்றன..
Research on Children's Literature
தமிழில் குழந்தைகள் இலக்கியம் குறித்த முதல் ஆய்வுமுனைவர் பட்ட ஆய்வேடு, பூவண்ணன் அவர்களால் “குழந்தைகள் இலக்கிய வரலாறு” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர், குழந்தைகள் இலக்கியம் குறித்த குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்கள் அதிகம் வெளிவரவில்லை. இதனால், இந்தப் பணியைத் தாமே மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஆசிரியருக்கு ஏற்பட்டது.
அதன் விளைவாக, “குழந்தைகள் இதழ்கள்: அன்றும் இன்றும்,” “உலகத் தமிழ் குழந்தைகள் இலக்கியம்,” “பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர்கள்,” “தற்கால குழந்தைகள் எழுத்தாளர்கள்,” “குழந்தைகள் இலக்கிய முன்னோடிகள்,” “புதுச்சேரி குழந்தைகள் இலக்கிய வரலாறு,” மற்றும் “சிறுவர்களின் சிநேகிதர் அழ. வள்ளியப்பா – 100” போன்ற நூல்களை அவர் வெளியிட்டார். இத்தகைய அரிய பணியை மேற்கொண்டதற்காகப் பலரும் தங்களது வியப்பையும் பாராட்டையும் என்னிடம் தெரிவித்துள்ளனர். இந்நூல்களில் இடம்பெற்றுள்ள ஆய்வுக் கட்டுரைகளைப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, “தமிழ் குழந்தைகள் இலக்கிய வரலாறு” என்ற தலைப்பில் 1,500 பக்கங்களைக் கொண்ட ஒரு நூலைத் தயாரித்து வருகிறார். இந்நூலின் கையெழுத்துப் பிரதி நிறைவடையும் நிலையில் உள்ளது.
ஆராய்ச்சிக் கட்டுரைகள்
குழந்தை இலக்கிய மாநாடு 2019
இரண்டாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு 17-19 மே 2019 ஆகிய மூன்று நாட்கள் திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இதையொட்டி “உலகத் தமிழ்க் குழந்தை இலக்கியம் ஓர் அறிமுகம்” என்ற மாநாட்டுச் சிறப்பு ஆய்வு நூல் வெளியிடப்பட்டது.
- இந்நூலில் சிங்கப்பூரில் சிறுவர் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற ஆய்வுக் கட்டுரையினை முனைவர்.எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி, சிங்கப்பூர் அவர்களும்,
- ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் ஒரு நோக்கு என்ற தலைப்பில் மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர், மெல்போர்ன், ஆஸ்திரேலியா அவர்களும்,
- அமெரிக்காவில் குழந்தை இலக்கியம் என்ற தலைப்பில் ஆர்பர்ட் ஃபெர்னாண்டோ அவர்களும்,
- மலேசியாவில் சிறுவர் இலக்கியம் என்ற ஆய்வுக் கட்டுரையினை குணநாதன் ஆறுமுகம் அவர்களும் எழுதியிருந்தா்கள்.
இந்நூலில் இந்தியா சார்பில் ஆர்.வி.பதி எழுதிய “இந்தியாவில் தமிழ்க் குழந்தை இலக்கிய வளர்ச்சியும் வரலாறும்” என்ற ஆய்வுக் கட்டுரை பிரசுரமாகியுள்ளது.
திண்டுக்கல் வளர்தமிழ் ஆய்வு மன்றம்
திண்டுக்கல் வளர்தமிழ் ஆய்வு மன்றம் மற்றும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் இணைந்து 16-17 மே 2020 ல் நடத்திய பதினேழாவது பன்னாட்டுக் கருத்தரங்கில் இவர் “சிறுவர்களுக்கான இதழ்கள் அன்றும் இன்றும் – ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையானது தகுதி வாய்ந்ததாக குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் பன்னாட்டு கருத்தரங்கு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையமும் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரி தமிழ் உயராய்வு மையமும் இணைந்து 05 மார்ச் 2020 அன்று நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் இதில் ஆர்.வி. பதி அவர்கள் “மழலை இலக்கியத்தில் பண்பாட்டுப் பதிவுகள் – ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் சமர்ப்பித்த கட்டுரையானது தகுதி வாய்ந்ததாக குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
கருத்தரங்க உரை
சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் 05 செப்டம்பர் 2020 அன்று நடத்திய சிறார் கலை இலக்கியச் சந்திப்புத் தொடர் கருத்தரங்கத்தில் “சிறார் இலக்கியம் கடந்து வந்த பாதை” என்ற பொருளில் நடைபெற்ற முதல் கருத்தரங்கத்தில் ஆர்.வி.பதி அவர்கள் “கவிமணி முதல் ரமணி வரை” என்ற தலைப்பில் சிறார் இலக்கியம் குறித்து விரிவாக உரையாற்றியுள்ளார்.
ஆர்.வி.பதியின் ஹைகூ உலகம்
ஆர்.வி.பதி எழுதிய ஹைகூ கவிதைகள் நூலானது 1993 ஆம் ஆண்டில் அபராஜிதா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
ஹைகூ கவிதைகளின் தொடக்க காலமாக இருந்த அந்த நாளில் ஆர்.வி.பதியின் இந்த நூலானது பிரபலமான எழுத்தாளர்கள் வாசகர்கள் கவிஞர்கள் என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றது.
எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் குமுதம் சிறப்பாசிரியராக இருந்த போது 20 பிப்ரவரி 1994 குமுதம் இதழில் இந்த நூலில் இருந்து எட்டு சிறந்த ஹைகூ கவிதைகளை தேர்வு செய்து பிரசுரித்தார். குங்குமச்சிமிழ் 15 ஏப்ரல் 1994 இதழில் இந்த நூலிலிருந்து எட்டு சிறந்த ஹைகூ கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு பிரசுரமாயின.
கவிஞர்.இ.பரிமளம் அவர்கள் முனைவர் பட்டத்திற்காக ஹைகூ கவிதைகளை ஆய்வு செய்துள்ளார். அதில் இந்த நூலும் இடம் பெற்றுள்ளது. இதுதவிர பல்வேறு ஹைகூ ஆய்வு நூல்களில் இந்த நுலிலிருந்து பல்வேறு கவிதைகள் எடுத்தாளப்பட்டுள்ளன. சென்னை புத்தகக்க கண்காட்சியில் 12 ஜனவரி 2014 அன்று ஆர்.வி.பதியின் “ஒற்றை எறும்பு” என்ற ஹைகூ நூலானது வெளியிடப்பட்டது. தினமணி நாளிதழில் இந்தவாரம் என்ற தலைப்பில் கலாரசிகன் என்ற பெயரில் எழுதி வரும் தினமணி ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதன் அவர்கள் இவருடைய ஒரு ஹைகூ (கவிதையினைக்குறிப்பிட்டு ஒரு செய்தியினை 22 செப்டம்பர் 2013 அன்று எழுதியது குறிப்பிடத்தக்கதாகும்.
அதிகாலை நேரம்
பூக்களுக்கு வியர்க்கிறது
மரண பயம்
மழை வேண்டும்
சிறுவன் தவம் செய்தான்
காகிதக்கப்பல்
பாவம் பெண்கள்
அவர்களே சுமக்கிறார்கள்
எல்லாவற்றையும்
DISTINCTIVE WORKS - TO NAME A FEW

சுனாமி பற்றி தமிழில் வெளிவந்த முதல் நூல்
தமிழகத்தை 2004 ஆம் ஆண்டில் சுனாமி தாக்கியது. சுனாமி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் பய உணர்வினைப் போக்கும் வகையில் சுனாமி தாக்கிய இருபது நாட்களுக்குள் “சுனாமி அறிந்ததும் அறியாததும்” என்ற தலைப்பில் சுனாமி குறித்த முழுத்தகவல்கள் அடங்கிய ஒரு நூலினை இவர் எழுதினார். இந்த நூலை சென்னை சுரா புக்ஸ் நிறுவனம் மிகக்குறுகிய நாட்களில் வெளியிட்டது. சுனாமி குறித்து தமிழில் வெளியான முதல் விழிப்புணர்வு நூல் இதுவே ஆகும்.

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட நூல் 2005
தமிழ்நாடு அரசின் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மகளிர் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக 2005 ஆம் ஆண்டில் ஒரு வார நேரடிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது. இப்பயிற்சியினை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக தமிழக அரசு நடத்தியது. பயிற்சிக்குத் தேவையான பாடநூல்களில் ஒரு நூலினை எழுதும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. “பராமரித்தலும் சரிசெய்தலும்” எனும் தலைப்பில் இவர் எழுதிய பாடநூலினை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

History of Tamil Children's literature
In Tamil, the first research doctoral dissertation on children's literature was published under the title “History of Children's Literature” by R. Vannan. After that, not many major research books on children's literature were published. While thinking about this, I wondered why we ourselves should not undertake this work. As a result, I published books such as “Children’s Magazines: Then and Now,” “World Tamil Children’s Literature,” “Bal Sahitya Puraskar Award Winners,” “Contemporary Children’s Writers,” “Pioneers of Children’s Literature,” “History of Puducherry Children’s Literature,” and “100 Years of Siruvarhalin Sinegitha Azh. Vazhiyappa.” Many people have expressed their amazement and appreciation to me regarding this rare work. The research articles I have written on children’s literature have been used by many who conducted studies. At present, I am preparing a 1,500-page book titled “History of Tamil Children’s Literature.” The manuscript of this book is nearing completion.
சாகித்திய அகாடெமியின் வெளியீடுகள்

தமிழ் ஹைகூ ஆயிரம்
சாகித்திய அகாடெமி 2012 ஆம் ஆண்டில் முனைவர் இரா.மோகன் அவர்கள் தொகுத்த “தமிழ் ஹைகூ ஆயிரம்” என்றொரு ஹைகூ நூலை வெளியிட்டது. 1984 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை வெளியான சுமார் இருநூறு ஹைகூ கவிதை நூல்களிலிருந்து நூறு ஹைகூ நூல்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து சிறந்த ஆயிரம் ஹைகூக்கள் தொகுக்கப்பட்டு இந்த நூல் வெளியிடப்பட்டது. இதில் ஆர்.வி.பதியின் ஹைகூ கவிதைகள் என்ற தலைப்பிலான நூலிலிருந்து சிறந்த பத்து கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

சிறுவர் நாடகக் களஞ்சியம்
சாகித்திய அகாடெமி 2021 ல் திரு.மு.முருகேஷ் அவர்கள் தொகுத்த “சிறுவர் நாடகக் களஞ்சியம்” என்ற சிறுவர் இலக்கிய நாடக நூலினை வெளியிட்டுள்ளது. இந்த நூலில் ஆர்.வி.பதி எழுதிய “பட்டப்பெயர்” என்ற நாடகம் (பக்கங்கள் 293 முதல் 296 வரை) பிரசுரமாகியுள்ளது.

சிறுவர்களுக்கான அறிவியல் கதைகள்
திரு.கொ.மா.கோ.இளங்கோ அவர்கள் சாகித்ய அகாதமிக்காக தொகுத்துள்ள “சிறுவர்களுக்கான அறிவியல் கதைகள்” என்ற நூலில் இவருடைய “ஏலியனுடன் ஒரு பயணம்” என்ற சிறார்களுக்காக அறிவியல் சிறுகதை இடம் பெற்றுள்ளது. இந்நூல் 2026 ல் வெளியானது.
சிறுவர் கதைகள்
The book SIRUVAR KATHAIGAL (Children's Stories), edited by Mr. Bhoopathi Periyasamy for Sahitya Akademi, includes his children's story titled *MAAMARAMUM MAARIMUTHUVUM* (The Mango Tree and Marimuthu). This volume is also expected to be published soon
தொடர்கள்
ஞானஆலயம் ஆன்மிக மாத இதழில் “மகான்களின் வரலாறு” என்றதலைப்பில் இவர் எழுதியஆன்மிகத்தொடர் தொடர்ந்து 25 மாதங்கள் பிரசுரமானது.
தமிழ் கம்ப்யூட்டர் கணினி மாதமிருமுறை இதழில் கணினி தொடர்பான ஏராளமான கட்டுரைகளும், தொடர்களும் எழுதியுள்ளார். .
கோயமுத்தூரிலிருந்து வெளிவரும் “தன்னம்பிக்கை”, மாத இதழில் தன்னம்பிக்கை வாழ்வியல் தொடர் ஒன்றை எழுதியுள்ளார்.
தினமலர் ஆன்மிக மலரில் “கோயிலும் பிரசாதமும்” என்ற தலைப்பில்நிறுவனத்தால் புத்தகமாகஇவர்2025 ஆம் ஆண்டில் 32 வாரங்கள் ஒரு தொடரினை எழுதியுள்ளார். இந்த தொடர் தினமலர் தலைப்பில்நிறுவனத்தால் புத்தகமாகஇவர் வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல நாளிதழான தினமலரின் இணைப்பாக சனிக்கிழமைகளில்வெளிவரும் சிறுவர்மலரில் தலைப்பில்நிறுவனத்தால் புத்தகமாகஇவர் எழுதும் “நாடோடியின் சாகசங்கள்” என்ற சிறார்களுக்கான தொடர்கதை 21 பிப்ரவரி 2026அன்று தொடங்கியது. இத்தொடர் 25 வாரங்கள் வெளிவரும்
முதன் முதலாக
முதல் சிறுகதை “கலர் டிவி” என்ற தலைப்பில் 23 ஜனவரி 19 தேதியிட்ட மின்மினி வார இதழில் பிரசுரமானது.
முதல் சிறுவர் சிறுகதை “திருந்திய உள்ளங்கள்” என்ற தலைப்பில் 12 ஆகஸ்ட் 1988 அன்று தினமணி வெள்ளிமணி இதழில் பிரசுரமானது.
முதல் கட்டுரை தினமணி வெள்ளிமணியில் 04 ஆகஸ்ட் 1989 அன்று “பிள்ளைகளின் மனநிலையும் பெற்றோரின் அணுகுமுறையும்” என்ற தலைப்பில் பிரசுரமானது.
முதல் கவிதை “சாதி எனும் சாத்தான்” டிசம்பர் 1989 இதழில் பிரசுரமானது.
முதல் வானொலி நிகழ்ச்சி “இலக்கிய ஏடு” எனும் நிகழ்ச்சியில் சென்னை வானொலி நிலையத்தில் 13 ஆகஸ்ட் 1991 அன்று ஒலிபரப்பானது.
முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி “கவிமலர்” என்ற தலைப்பில் சென்னை தொலைக்காட்சியில் 17 ஜீலை 1996 அன்று “கடவுளின் நிழல்” மாலை நேரலையில் ஒளிபரப்பானது..
முதல் ஆன்மிகக் கட்டுரை தினமணி வெள்ளிமணியில் 08 ஜனவரி 2016 அன்று “சஞ்சீவிராயர் கோயில்” என்ற தலைப்பில் வெளியானது.
முதல் நூல் “ஹைகூ கவிதைகள்” வெள்ளிமணியில் என்ற தலைப்பில் 1994 ல் 1994.
முதல் நாடகம் சென்னை தொலைக்காட்சியில் இரண்டாவது அலைவரிசையில் 17 ஜீலை 1996 அன்று “கடவுளின் நிழல்” என்ற தலைப்பில் ஒளிபரப்பானது.
“சுனாமி அறிந்ததும் அறியாததும்” - சுனாமி குறித்து தமிழில் வெளியான முதல் விழிப்புணர்வு நூல் -2004
SPIRITUAL BOOKS
SCIENCE, COMPUTER SCIENCE
CHILDREN'S LITERATURE
