ஆர். வி. பதி, வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எளிமையான மற்றும் சுவாரஸ்யமான நடையில் எழுதியுள்ளார். அவரது **“நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வரலாறு”** என்ற நூல், சென்னையைச் சேர்ந்த சூரா புக்ஸ் நிறுவனத்தால் ஜூன் 2004-ல் தமிழில் வெளியிடப்பட்டது.
தமிழில் மிகவும் வரவேற்பு பெற்ற இந்த நூலானது “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசஸ்நேகத்தின்டே சிம்ம கர்ஜனம்” என்ற தலைப்பில் திரு.பாபுராஜ் காலம்பூரே (Baburaj Kalampoore) என்பவரால் மலையாள மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு 2011 ஆம் ஆண்டில் எர்ணாகுளம் சுரா புக்ஸ் பிரைவேட் லிமிடெட் புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டு பல பதிப்புகளைக் கண்டுள்ளது.


காந்திஜியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 2019 ஆம் ஆண்டில் காந்திஜியின் அகிம்சைக் கொள்கைகளை சிறார்களின் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட “கண்ணன் வழி காந்தி வழி” என்ற சிறார் நாவலை தமிழில் நிவேதிதா பதிப்பகம் வெளியிட்டது. மொழிபெயர்ப்பிற்காக சாகித்ய அகாதமி விருது வென்ற திரு.ஜில்லேள்ள பாலாஜி அவர்கள் இந்நூலினை தமிழிலிருந்து தெலுங்கு மொழிக்கு “கண்ணன் மார்க்கம் காந்தி மார்க்கம்” என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்த தெலுங்கு மொழிபெயர்ப்பு நூலானது புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் பதிப்பகத்தின் மூலம் 13 பிப்ரவரி 2025 அன்று மின்னூலாக வெளியாகியுள்ளது.
“மாயவிளக்கு” – சிறுவர்களுக்கான சிறுகதைத் தொகுப்பு டாக்டர் ஆர்.வி. அபராஜிதா, M.D.S. அவர்களால் “The Magical Lamp” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவ்விரு நூல்களும் சென்னை நிவேதிதா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.


2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் *150ஆவது பிறந்தநாள் நினைவு ஆண்டை* முன்னிட்டு, இளம் வாசகர்களிடையே காந்தியடிகளின் அகிம்சைக் கொள்கைகளை வளர்க்கும் நோக்கில், அவர் “கண்ணன் வழி காந்தி வழி” என்ற சிறுவர் நாவலை எழுதினார். இந்நூல் தமிழில் நிவேதிதா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்நூல் டாக்டர் ஆர்.வி. அபராஜிதா, M.D.S. அவர்களால் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் “Kannan – The Ardent Gandhian” என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 2025 பிப்ரவரி 13ஆம் தேதி, Pustaka Digital Media Private Limited நிறுவனம் மூலம் மின்னூல் (e-book) வடிவில் வெளியிடப்பட்டது.
சென்னையில் 16 ஜனவரி 2025 முதல் 18 ஜனவரி 2025 வரை சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி (Chennai International Book Fair 2025) சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல பதிப்பாளர்கள் பங்கு பெற்றார்கள். இலக்கிய முகவர் செல்வி.ஜனனி அவர்களின் முயற்சியில் எனது கீழ்காணும் நூல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய கையெழுத்தானது.
- காமா பப்ளிஷர்ஸ் (M/s Khama Publishers) எனது அப்புவின் சைக்கிள் என்ற சிறார் நாவலை பெங்காலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்ய தேர்வு செய்துள்ளது.
- ஆர்கேன் லிட்ரேச்சர் அண்டு கிண்டர்ஸ்டோரிஸ் ஹப் (M/s Arcane Literature & Kinderstories Hub) என்ற பதிப்பகம் எனது பள்ளி மாணவர்களுக்கான பத்து நிமிட மேடை நாடகங்கள் என்ற நூலினை மலாய் மொழியில் மொழிபெயர்ப்பு செய்ய தேர்வு செய்துள்ளது. இதே பதிப்பகம் அப்புவின் சைக்கிள் என்ற சிறார் நாவலையும் மலாய் மொழியில் மொழிபெயர்ப்பு செய்ய தேர்வு செய்துள்ளது.
- ப்ளஸ் ப்ப்ளிஷர்ஸ் (M/s Plus Publishers) என்ற பதிப்பகம் எனது பள்ளி மாணவர்களுக்கு பத்து நிமிட மேடை நாடகங்கள் என்ற சிறார் நாடக நூலினை ஹிந்தி மொழியில் மொழிபெயர்ப்பு செய்ய தேர்வு செய்துள்ளது.
- க்ளப் டெ அட்டோரஸ் (M/s Clube de Autores) என்ற பதிப்பகம் எனது சிங்கம் ஏன் ராஜாவாக இருக்கிறது ? என்ற சிறார்களுக்கான சிறுகதைகளை ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பு செய்ய தேர்வு செய்துள்ளது.
மேற்காணும் நூல்கள் யாவும் வரும் 2026 சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியாக உள்ளன.
இவர் எழுதி தினமலர் வாரமலரில் 28 ஏப்ரல் 2024 அன்று பிரசுரமான “காற்றில் கரைந்த ஈகோ” என்ற சிறுகதையினை திருமதி.அலமேலு கிருஷ்ணன் அவர்கள் ஹிந்தியில் “ஹவா மே குலா அஹங்” என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு செய்ய இச்சிறுகதை என்ற தலைப்பில் ஹிந்தி ப்ரச்சார் சமாச்சார் (HINDI PRACHAR SAMACHAR Monthly Magazine) என்ற மாத இதழில் ஆகஸ்ட் 2024 இதழில் பிரசுரமாகியுள்ளது.
