ஊடகங்களில்
ஆர். வி. பதியின் படைப்புகளும் இலக்கியப் பங்களிப்புகளும் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களில் இடம்பெற்றுள்ளன.
- "கடவுளின் நிழல்" மற்றும் "கல்யாண வேளை" ஆகிய நாடகங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.
ஆர். வி. பதியின் இரண்டு சிறுகதைகள் பொதிகை தொலைக்காட்சியின் இரண்டாவது அலைவரிசியில் ஒளிபரப்பப்பட்டன.
பொதிகை தொலைக்காட்சியின் **"கவிமலர்"** நிகழ்ச்சியில் நேரடியாகக் கவிதைகள் வாசித்துள்ளார். மேலும், சன் தொலைக்காட்சியின் **"தமிழ் மன்றம்"** நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
ஆர். வி. பதியின் "நியூஸ் டைஜஸ்ட்" நிகழ்ச்சி வானொலியின் "காலை மலர்" ஆர். வி. பதியுடன் அரை மணி நேர ஐந்து முறை ஒலிபரப்பப்பட்டது. மேலும், அவரது கவிதைகள், நாடகங்கள் மற்றும் தனிப்பாடல்கள் "இளைய பாரதம்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. "திறம்பட வேலை செய்வது எப்படி?" என்ற அவரது கட்டுரை "காலை மலர்" நிகழ்ச்சியில் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஆர். வி. பதியுடன் அரை மணி நேர.
ஜெயா தொலைக்காட்சி நேர்காணல்- 2005
2005ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியின் "காலை மலர்" நிகழ்ச்சியில் ஆர். வி. பதியுடன் அரை மணி நேர சிறப்பு நேர்காணல் ஒளிபரப்பப்பட்டது.
பொதிகை தொலைக்காட்சி நேர்காணல்- 2010
2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், பொதிகை தொலைக்காட்சியின் "காலைத் தென்றல்" நிகழ்ச்சியில் "நம் விருந்தினர்" பகுதியில் அவரை மையமாகக் கொண்ட அரை மணி நேர சிறப்பு நேர்காணல் ஒளிபரப்பப்பட்டது. .
- ஆர். வி. பதியின் க்ரைம் நாவலான "தப்பித்தால் போதும்", இயக்குநர் சகு பாண்டியன் அவர்களால் முழுநீளத் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படைப்புலகிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து தனது தனித்துவமான பங்களிப்பை வழங்கி வரும் ஆர். வி. பதி, தமிழ் இலக்கியத்தின் பல்துறை படைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவராகத் திகழ்கிறார்.
