அறிவியல் மேதைகள் கண்டுபிடிப்புகளில் மூழ்கி தங்களுடைய வாழ்க்கையையே அறிவியலுக்காக அர்ப்பணித்திருக்கிறார்கள். அறிஞர்கள் தங்கள் அறிவின் காரணமாக பெரும் செல்வந்தர்களாகி இருக்கிறார்கள். பல அறிஞர்கள் மக்களால் கேலிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இத்தகைய மேதைகளின் வாழ்க்கையை நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். இனி நாம் அறிவியல் மேதைகளின் வாழ்க்கையையும் அவர்கள் நமக்கு அளித்துச் சென்ற கண்டுபிடிப்புகளைப் பற்றியும் பார்க்கலாம்.