Nooru Vayathu Vaazha Nooru Vazhigal

By R.V.Pathy

வணக்கம். மனிதனாகப் பிறக்கும் அனைவருமே நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று விரும்புபவர்களாகவே இருக்கிறார்கள். நூறாண்டு காலம் வாழ்வது சுலபமா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்ல வேண்டும். நம் மனித வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் முயற்சியை அடிப்படையாகக் கொண்டது. முயற்சி மட்டும்தான் நம்முடையது. ஆனால் முடிவு அவன் கையில் என்றால் அது மிகையாகாது. இதன்படி பார்த்தால் இந்த புத்தகமும் ஒரு முயற்சிதான்.

முறையான உணவு வழக்கம், மகிழ்ச்சியான மனநிலை, நல்ல தூக்கம், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை இப்படி பல விஷயங்கள் இருக்கின்றன. இந்த விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றினால் நூறாண்டுகள் வாழ முடியும் என்பது ஒரு வித முயற்சியே. ஆரோக்கிமான மனிதர்களாலேயே நம் நாடு முன்னேற்றம் அடையும். அதன்படி எல்லோரும் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தின் அடிப்படையில் இந்த புத்தகம் உருவாகியுள்ளது. வாங்கிப் படியுங்கள். இந்த புத்தகத்தில் உள்ள விஷயங்களை பின்பற்றுங்கள். வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் நிச்சயம் உங்களுக்குச் சொந்தமாகும்.

Availability

available

Categories

Publisher Name

Format

Paperback & ebook

Country

India

Language

Tamil

Average Ratings

Submit Your Review You are not allowed to submit a review. Please Log In