நான் கடந்த பல வருடங்களாக பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களை எழுதியிருந்தாலும் “நில் கவனி செல்” என்ற சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி இந்த புத்தகம் எனக்கு மனநிறைவைத் தந்த ஒரு புத்தகம். மேலும், இது உங்கள் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய மிக முக்கியமான புத்தகமாகும்.
இந்த புத்தகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஏராளமான தகவல்கள் தரப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தை கவனமாகப் படித்து இதில் கூறப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றி நீங்கள் உங்கள் வாகனத்தை இயக்கினால் தொண்ணூறு சதவிகித விபத்துக்களைக் குறைத்துவிடலாம். நீண்ட வருடங்கள் மகிழ்ச்சியாகவும் வாழலாம்.