உங்களுக்காக நான் பிரத்யோகமாக எழுதியுள்ள “முதலை குகை” ஒரு சிறுவர் சிறுகதை நூலாகும். இந்த நூல் நான் எழுதி வெளியாகும் 51வது சிறுவர் இலக்கிய நூலாகும். இந்த நூலில் நான் உங்களுக்காக பதினாறு சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். சிறுவர்களாகிய உங்களுக்காக கதைகள் எழுதும் போது நானும் ஒரு சிறுவனாகி விடுகிறேன் என்பதே உண்மை.
இந்த நூலில் உள்ள சிறுகதைகள் அனைத்தும் காட்டில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட நீதி நூலாகும்.
ஓவ்வொரு சிறுகதையும் உங்களுக்கு ஒரு நீதியை போதிக்கும். இந்த நூலில் உள்ள சிறுகதைகளில் ஒரு மனித கதாபாத்திரம் கூட இடம் பெறவில்லை என்பது கூடுதல் சிறப்பு. “முதலை குகை” எனும் இந்த நூலைப் படித்து மகிழுங்கள்.