மயிலாப்பூரானது கயிலைக்கு ஒப்பானதால் “மயிலையே கயிலை” என அழைக்கப்படுகிறது. பெருமைகள் பல வாய்ந்த மயிலாப்பூரில் அமைந்துள்ள ஏழு சப்த ஸ்தான சிவத்தலங்களை ஒரே சமயத்தில் வரிசைக்கிரமமாக தரிசித்து பலனடைந்தவர்கள் ஏராளம். ஏழு சிவத் தலங்களையும் முறைப்படி வரிசைக்கிரம்மாக ஒரே நாளில் தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். மகாசிவராத்திரி அன்று ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள் இத்தலங்களுக்குச் சென்று தரிசித்து இறையருளைப் பெறுகிறார்கள்.