“ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்”, “ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள்” என்ற நூலினை உங்களுக்காக எழுதியுள்ளேன். தற்போது “ஆரோக்கிய வாழ்விற்கு ப்ராணயாமம்” என்ற நூலினை எழுதியுள்ளேன். தற்போதைய கோவிட்-19 சூழலில் ப்ராணயாமம் நமது உயிர்காக்கும் கவசம் என்பதை பலர் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.
ப்ராணயாமா பயிற்சியினை ஒரு குருவின் துணைகொண்டு கற்றுக்கொள்வதே நல்லது. பாதுகாப்பானது. ப்ராணாயாமா பற்றிய ஒரு அறிமுக நூல் இது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ப்ராணயாமா பற்றிய அடிப்படை அறிவினை உங்களுக்கு இந்த நூல் தரும். இந்த நூல் அளவில் மிகவும் சிறியது. ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒரு நூல் என்றால் அது மிகையாகாது. உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியத்தைக் கொண்டு வந்து உங்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் ஒரு சிறந்த நூல்.
ஆரோக்கிய வாழ்விற்கு பிராணயாமம்” என்ற இந்த நூலை தனது புஸ்தகா நிறுவனத்தில் மின்னூலாக வெளியிடும் டாக்டர்.இராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி.