இது ஒரு வாழ்வியல் நூல். என் அறுபது வருட வாழ்க்கை அனுபவத்தில் நான் கற்ற பாடங்களை நான் பெற்ற அனுபவங்களை எளிய நடையில் இந்த நூலில் ஆங்காங்கே பதிவு செய்துள்ளேன். இது ஒரு பிரமாதமான நூல் என்றும் சொல்ல மாட்டேன். இது ஒரு எளிய நூல். எளிமையான ஒரு மனிதன் எழுதிய அனுபவ நூல். இந்த நூலைப் படித்தால் மனதிற்கு புத்துணர்ச்சி நிச்சயம் கிடைக்கும். உங்கள் வாழ்வில் ஒரு சிறுமாற்றம் நிகழலாம்.