விருதுகள்
வைணவ மகாசங்கம் விருது 2011
சென்னையில் நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் வைணவ மகாசங்கம் என்ற வைணவ பக்தி அமைப்பினர் ஆண்டு தோறும் வைணவ இலக்கியம் படைக்கும் சிறந்த எழுத்தாளர்களை அழைத்து கௌரவித்து வருகிறார்கள். மனதை மயக்கும் கண்ணன் கதைகள் என்ற வைணவ பக்தி இலக்கிய நூலினை சிறந்த நூலாகத் தேர்வு செய்து டிசம்பர் 2011 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற விழாவில் கௌரவிக்கப்பட்டார். நீதியரசர் ஜெயச்சந்திரன் மற்றும் மேல்கோட்டை ஜீயர் ஆகியோர் ஆர்.வி.பதிக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தனர்.
பவித்ரம் அறக்கட்டளை விருது 2012
சென்னை பவித்ரம் அறக்கட்டளை அமைப்பினர் மனதை மயக்கும் கண்ணன் கதைகள் மயக்கும் கண்ணன் கதைகள் என்ற நூலினை சிறந்த ஆன்மிக நூலாகத் தேர்வு செய்து சிறந்த ஆன்மிக எழுத்தாளர் விருதினை வழங்கி கௌரவித்தார்கள். சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆர்.எஸ்.இராமநாதன் அவர்கள் மூத்த தமிழ் எழுத்தாளர் திரு.பாக்கியம் ராமசாமி அவர்கள் முன்னிலையில் ஆர்.வி.பதி அவர்களுக்கு இந்த விருதினை வழங்கி கௌரவித்தார். இவ்விழா 04 மார்ச் 2012 அன்று சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது 2013
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தனது 25வது ஆண்டு விழாவில் வாருங்கள் செல்வங்களே விஞ்ஞானி ஆகலாம் என்ற சிறுவர் இலக்கிய அறிவியல் நூலைச் சிறந்த நூலாகத் தேர்வு செய்து 06 அக்டோபர் 2013 அன்று கோவை பாரதிய வித்யா பவன் அரங்கில் நடைபெற்ற விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருதினை ஆர்.வி.பதி அவர்களுக்கு வழங்கி கௌரவித்தது. இந்த விருதினை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அன்றைய துணைவேந்தர் டாக்டர்.ம.திருமலை அவர்கள் வழங்கி கௌரவித்தார். அருகில் விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் விஜயா வேலாயுதம் அவர்கள் உள்ளார்.
ஜெய்வர்மம் அறக்கட்டளை விருது 2013
கோயமுத்தூர் ஜெய்வர்மம் அறக்கட்டளை அமைப்பு 2013 ஆம் ஆண்டில் நிதித்துறை திரு.எஸ்.சங்கரநாராயணன் அவர்கள் முன்னிலையில் சிறந்த எழுத்தாளர் விருதினை சிறந்த எழுத்தாளர் விருதினை வழங்கி கௌரவித்தது. கோயமுத்தூரில் 27 டிசம்பர் 2013 அன்று நடைபெற்ற விழாவில் அறக்கட்டளைத் தலைவர் டிராகன் டி.ஜெயராஜ் அவர்கள் முன்னிலையில் திரைப்பட மூத்த ஸ்டண்ட் இயக்குநர் திரு.ஜாகுவார் தங்கம் அவர்கள் இந்த விருதினை வழங்கி கௌரவித்தார். எஸென்ஷியல் பதிப்பக அதிபரும் தொழில் நுட்ப எழுத்தாளருமான திரு.ஜெ.வீரநாதன் அவர்கள் அருகில் உள்ளார். கோயமுத்தூர் திவ்யோதயா ஹாலில் இந்த விழா நடைபெற்றது
பபாசி விருது 2014
சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான விருதினையும் சிறந்த குழந்தை அறிவியல் நூல் எழுத்தாளருக்கான விருதினையும் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. 10 ஜனவரி 2014 அன்று சென்னை ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 36 வது புத்தகக் கண்காட்சி நிகழ்வில் புத்தகக் கண்காட்சி அரங்கத்தில்சிறந்த குழந்தை அறிவியல் நூல் எழுத்தாளர்விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மை இயக்குநர் திரு.இராஜேந்திரன் ஐஏஎஸ் அவர்கள் இந்த விருதினை வழங்கி கௌரவித்தார்
நெய்வேலி புத்தகக் கண்காட்சி விருது 2015
நெய்வேலி புத்தகக் கண்காட்சி கடந்த 19 ஆண்டுகளாக ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது. பதினெட்டாவது நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் போது 09 ஜீலை 2015 அன்று நெய்வேலி லிக்னைட் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் என்எல்சி செயல் இயக்குநர் சுரங்கம் திரு.சையத் அப்துல் ஃபதேக் காலித் அவர்கள் என்எல்சி நிறுவனத் தலைமைப் பொது மேலாளர் நிதித்துறை திரு.எஸ்.சங்கரநாராயணன் அவர்கள் முன்னிலையில் சிறந்த எழுத்தாளர் விருதினை வழங்கி கௌரவித்தார்.
மணிமேகலை மன்றம் விருது 2016
இராஜபாளையம் மணிமேகலை மன்றம் தனது 58 ஆம் ஆண்டு விழாவில் முதலைக்குகை என்ற சிறுவர் இலக்கிய நூலை 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுவர் இலக்கிய நூலாகத் தேர்வு செய்து 18 செப்டம்பர் 2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை இராஜபாளையம் காந்தி கலைமன்றத்தில் நடைபெற்ற விழாவில் சான்றிதழையும் சிறுவர் இலக்கியச் செம்மல் என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவித்த்து. இந்த விழாவில் தேசிய அறிவியல் விருது பெற்ற டாக்டர்.கு.கணேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பேராசிரியர் முனைவர்.த. இராஜாராம் அவர்கள் முன்னிலையில் குழந்தை எழுத்தாளரும் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவருமான குறிஞ்சிச்செல்வர் டாக்டர்.கொ.மா.கோதண்டம் அவர்கள் விருதினை வழங்கி கௌரவித்தார்.
திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது 2017
திருப்பூர் தமிழ்ச் சங்கம் 2015 ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதுகளுக்காக நான் எழுதி கோவை விஜயா பதிப்பகம் டிசம்பர் 2015 ல் வெளியிட்ட விண்வெளியில் ஒரு பயணம் என்ற சிறுவர் அறிவியல் நூலை 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுவர் நூலாக தேர்வு செய்து கௌரவித்தது. திருப்பூர் புத்தகக் கண்காட்சி அரங்கில் 07 பிப்ரவரி 2017 அன்று இதற்கான விருதினையும் கேடயத்தையும் திருப்பூர் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர்.அ.முருகநாதன் அவர்கள் முன்னிலையில் தஞ்சாவூர் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் க.பாஸ்கரன் அவர்கள் வழங்கி சிறப்பு செய்தார்.
புதுக்கோட்டை இலக்கியப் பேரவை விருது 2018
புகழ் மிக்க புதுக்கோட்டை இலக்கியப் பேரவை அமைப்பு இவருக்கு 23.12.2018 அன்று புதுக்கோட்டையில நடைபெற்ற விழாவினில் இலக்கியச் சுடர் என்ற பட்டத்தையும் பதக்கத்தையும் வழங்கி கௌரவித்தது. இவ்விழாவினில் 29 சான்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர். இத்தகைய 29 சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றினைத் தொகுத்து தடாகத் தாமரைகள் என்ற நூல் வெளியிடப்பட்டது.
சக்தி டி.கே.கிருஷ்ணசாமி விருது 2019
சென்னை, சைதாப்பேட்டை, 88/13 காரணீஸ்வரர் கோவில் தெருவில் கடந்த 67 ஆண்டுகளாக இயங்கிவரும் சைதை மகாத்மா காந்தி நூல் நிலையத்தை நடத்தி வரும் காந்தியவாதி திருமிகு.கு.மகாலிங்கம் (90) அவர்கள் ஆண்டு தோறும் மகாத்மாவின் பிறந்தநாளினை முப்பெரும் விழாவாகக் கொண்டாடி சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து சக்தி டி.கே.கிருஷ்ணசாமி விருது வழங்கி வருகிறார். மகாத்மாவின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு 13 அக்டோபர் 2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 06.30 மணி அளவில் சென்னை, சைதாப்பேட்டை, குளக்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாரணீஸ்வரர் சொர்ணாம்பிகை திருமண மண்டபத்தில் இந்த விருது திரு.ரவி தமிழ்வாணன், திரு.லேனா தமிழ்வாணன், பேராசிரியர் சிவ.செல்வகுமார், முனைவர் மின்னூர் சீனிவாசன், திரு.அ.நாகராசன், திரு.கே.ஏ.ஜெயச்சந்திரன், திரு.தி.வ.மெய்க்கண்டான், திரு.கார்முகிலோன், டாக்டர்.பிரேமா ஆகியோருடன் திரு.ஆர்.வி.பதி என பத்து எழுத்தாளர்கள் மற்றும் பல்துறை அறிஞர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. திரு.ஆர்.வி.பதி அவர்களுக்கு காந்தியவாதி திருமிகு.கு. மகாலிங்கம் அவர்கள் இந்த விருதினை வழங்கி கௌரவித்தார்.
கலைமகள் பரிசு 2021
கலைமகள் இதழ் நடத்திய கா ஸ்ரீ ஸ்ரீ நினைவு சிறுகதை போட்டியில் ஆசிரியரின் சிறுகதை ‘ காலக்கிரகம்’ முதல் பரிசை வென்றது. ‘காலக்கிரகம்’ முதல் பரிசான ரூபாய் 7000 வென்றது.
