நவகிரக கோயில்கள் என்றாலே நம் நினைவுக்கு வருபவை கும்பகோணத்தைச் சுற்றிலும் அமைந்துள்ள நவகிரக கோயில்களே. கும்பகோணம் பகுதிக்குச் சென்று நவகிரக கோயில்களை வழிபடுவது என்பது பலருக்கும் பொருளாதார ரீதியாகவும் வேறு சில காரணங்களினாலும் இயலாத காரியமாக இருந்து வருகிறது. அத்தகைய் அன்பர்கள் சென்னையில் அமைந்துள்ள நவகிரக கோயில்களுக்குச் சென்று வழிபட்டு தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். சென்னையைச் சுற்றி உள்ள நவகிரக கோயில்கள் மிகப் பழமையானவை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாகும்.