பகவான் பெரியவனா, பக்தன் பெரியவனா என எந்தக் கடவுகளைக் கேட்டாலும், பக்தனே பெரியவன் என பதிலளித்திருக்கிறார்கள். புராணங்கள் இதை தெளிவுபடுத்துகின்றன. இதனால் நமது மக்கள், அந்த பக்தர்களையே தெய்வங்களாகப் பார்க்கிறார்கள். இத்தகைய மகான்கள் எத்தனையோ ஆயிரம் பேர் இருக்கின்றனர். இவர்களில் 16 ரத்தினங்களைத் தேர்ந்தெடுத்தும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, இந்த நூலில் வடித்துள்ளார் நூலாசிரியர் ஆர்.வி.பதி.