“வளமான வாழ்வு தரும் வைணவத்தலங்கள்” என்ற இந்த நூலில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிறப்பான 20 வைணவத்தலங்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த கோயில் கட்டுரைகள் அனைத்தும் தினகரன் ஆன்மிகப் பலன், குமுதம் பக்தி ஸ்பெஷல், தீபம் முதலான பிரபல ஆன்மிக இதழ்களில் பிரசுரமாகி வாசகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றவை. இது போன்ற பயனுள்ள பல ஆன்மிக நூல்கள் தொடர்ந்து வெளிவர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.