“தவளை இளவரசி” எனும் தலைப்பில் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் எண்ணத்தில் சிறுவர்களுக்காக பதினைந்து கதைகள் அடங்கிய இந்த நூலை எழுதியுள்ளேன். சிறுவர் சிறுமியர்களாகிய உங்களுக்கு கதை எழுதுவது என்பது எனக்கு மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். உங்களுக்காக கதை எழுதும் போது நானும் ஒரு சிறுவனாகிவிடுகிறேன் என்பதே உண்மை.
எதிர்கால இந்தியா உங்கள் கைகளில் இருக்கிறது. இத்தகைய நீதிக்கதைகளை நீங்கள் படித்து அவற்றில் உள்ள நல்ல நல்ல கருத்துக்களை உங்கள் மனதில் பதித்து எதிர்காலத்தில் பண்புகள் நிறைந்த நல்ல மனிதர்களாக அனைவரும் போற்றும் விதமாக வாழ வேண்டும். உங்கள் பெற்றோருக்கு நீங்கள் பெருமைகளை மட்டுமே சேர்க்க வேண்டும்.