Ramayana Kathaigal
இந்தியாவின் தலைசிறந்த இரண்டு இதிகாசங்களாக போற்றப்படுபவை இராமாயணம், மகாபாரதம் ஆகும். இவை இரண்டுமே வாழ்வியல் சம்பந்தப்பட்டவை. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும். எப்படி வாழக்கூடாது என்ற அடிப்படையான இரண்டு விஷயங்களுக்கும் ககைள் மூலம் விடை தருபவை இந்த இதிகாசங்கள் என்றால் அது மிகையாகாது.
இராமாணயம், மகாபாரதம் இவை இரண்டுமே நமது வாழ்க்கையை செம்மையாக அமைத்துக் கொள்ளத் தேவையான ஏராளமான நீதிகளை நமக்குச் சொல்லுகின்றன. இந்த இரண்டு நூல்களிலும் நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படுகின்றன. இராமாயணம் ஒரு பெண்ணுக்காக நிகழ்ந்த ஒரு மாபெரும் யுத்தம். மகாபாரதம் மண்ணுக்காக நிகழ்ந்த ஒரு மாபெரும் யுத்தம்.