பட்டப்பெயர் தொடங்கி நல்ல உள்ளம் வரை பத்து நாடகங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. பத்தும் முத்துக்கள். பன்முகப் படைப்பாளி திரு.ஆர்.வி.பதி அவர்கள் என்றாலும் அவர் சிறுவர்களுக்காக அதுவும் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்காக எழுதும் போது சிறுவனாகவே மாறி விடுகிறார். இந்த ரசவாதம் எல்லாருக்கும் வராது. இயல்பாகவே அவர் குழந்தை மனம் கொண்டவராக இருப்பதால் குழந்தைகளைப் பற்றி நிறையவே அறிந்து வைத்திருக்கிறார். அரும்புகளின் குறும்பு நாடகத்தில் காணமுடிகிறது. பட்டப்பெயர் நாடகம் அந்த வகைதான். நகைச்சுவையுடன் நாடகத்தைப் படைத்துள்ளார். நாடகத்தின் திருப்பம் வெகுசிறப்பு. கட்டாயம் பள்ளி ஆண்டு விழாக்களில் அரங்கேற்றப்பட வேண்டிய நாடகம். அதே போல “பானுவின் சபதம்” மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும். அற்புதமான நாடகம். இப்படி ஒவ்வொரு நாடகமும் ஒவ்வொரு வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. பள்ளி மாணவர்கள் ஆசிரியர் படித்து மகிழ வேண்டிய நூல். அதோடு மட்டுமல்ல பள்ளி ஆண்டு விழாக்களில் நாடகமாக நடிக்க வேண்டிய நாடகங்கள் இடம் பெற்றுள்ள நூல்.