நம் குழந்தைகள் சிறப்பான செழிப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எல்லா பெற்றோருமே விரும்புகிறோம். ஆனால் நாம் நம்முடைய குழந்தைகளுக்கு எத்தனை கதைகள் சொல்லி அவர்களை மகிழ்வித்திருக்கிறோம் ? யோசித்துப் பாருங்கள். உங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். சிறப்பான நீதிக்கதைகளைச் சொல்லி அவர்களை சந்தோஷப்படுத்துங்கள். அவர்களின் மனதில் நேர்மையை விதையுங்கள். அப்போதுதான் அவர்கள் சிறந்த இந்தியக் குடிமக்களாக விளங்கி உங்களுக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பார்கள்.
நமது மாணவர்களுக்காக “முத்தான மாணவர்களுக்கு முல்லா கதைகள்” என்ற தலைப்பில் சிறந்த முல்லா கதைகளைத் தொகுத்து எளிய நடையில் எழுதியுள்ளேன். எத்தனை ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இத்தகைய கதைகள் அழியாமல் நம்மிடைய வாழ்ந்து நம் வாழ்க்கையை வளப்படுத்தும். “முத்தான மாணவர்களுக்கு முல்லா கதைகள்” என்ற இந்த சிறுவர் நீதி நூலை புஸ்தகாவில் மின்னூலாக வெளியிடும் டாக்டர்.இராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றிகள்.