ஆதிகாலத்தில் இந்தியா வானசாஸ்திரத்தில் தலைசிறந்து விளங்கியது. இன்று உலகம் முழுவதும் விளையாடப்படும் சதுரங்க விளையாட்டு இந்தியாவில் கண்டுபிடிக்கபட்டது. இவ்வாறு இந்தியா உலக நாடுகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியது. நம்மில் பலருக்கு இத்தகைய விஷயங்கள் தெரிவதில்லை. குறிப்பாக தற்கால மாணவர்கள் நம் அறிவியல் முன்னோடிகளின் அருமைகளையும் பெருமைகளையும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு இந்திய அறிவியல் மேதைகளை நம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதே இந்த நூல்.