காலத்திற்கேற்றவாறு என்னை தகவமைத்துக் கொண்டு அவ்வப்போது அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டு செயல்படும் எனக்கு எங்கள் பேரன் ஆத்விக்கின் முதல் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்று தோன்றியது. அவனை முக்கிய கதாபாத்திரமாக வைத்து சிறார்களுக்குப் பிடித்தமான ஒரு புத்தகத்தை எழுதி அதை அவனுடைய முதல் பிறந்தநாளின் போது வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தேன். உடனே அந்த புத்தகத்திற்கு “ஆத்விக்கின் அதிசய உலகம்” என்று பெயரையும் சூட்டி விட்டேன். பிறகுதான் மெல்ல மெல்ல யோசித்து ஆறு அத்தியாயங்களில் புத்தகத்தை எழுதி முடித்தேன். அந்த புத்தகமே இப்போது உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.