Pugazh Petra Aanmeega Kathaigal

By R.V.Pathy

ஆன்மிகத்திற்குப் புகழ் பெற்ற நாடு நம் இந்திய நாடு. இந்தியாவின் தலைசிறந்த இரண்டு இதிகாசங்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகும். இந்து மதத்தில் ஏராளமான ஆன்மிக நீதிக் கதைகள் உள்ளன. இவற்றில் பல கதைகள் மிகவும் புகழ் பெற்றவை. நம்மில் பலருக்கு பல விஷயங்கள் பெயரளவிலேயே தெரிந்திருக்கின்றன. மக்களிடையே நீண்ட நெடுங்காலமாக வழங்கி வரும் பலவிதமான ஆன்மிகக் கதைகளிலிருந்து புகழ் பெற்ற இருபத்தி ஆறு கதைகளைத் தேர்ந்தெடுத்து இந்த புத்தகத்தில் எளிய நடையில் எழுதியுள்ளேன்.

புகழ் பெற்ற ஆன்மிகக் கதைகளைப் படித்து அதில் கூறப்பட்டுள்ள நீதிகளை புரிந்து கொள்ளுங்கள். நல்ல நீதிகளை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள். இந்த செயல் உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் நிச்சயம் உயர்த்தி உங்களுக்கு பெருமை சேர்க்கும்.

“புகழ் பெற்ற ஆன்மிகக் கதைகள்” என்ற நூலினை சிறுவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் படித்து மகிழலாம். பயனுள்ள வகையில் பொழுதைச் செலவிடலாம். பயனுள்ள புராண நீதிக்கதைகளைப் படித்து இதன் உட்பொருளை மனதில் நிறுத்தி உங்கள் வாழ்க்கையை நீங்கள் செம்மையாக அமைத்துக் கொள்ளலாம். இத்தகைய கதைகளை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை மகிழ்விக்கலாம். சிறந்த மனிதர்களாகவும் உருவாக்கலாம்.

Availability

available

Categories

Publisher Name

Reading Age

8+ years

Format

eBook

Country

India

Language

Tamil

Average Ratings

Submit Your Review You are not allowed to submit a review. Please Log In