இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றியவர் தான் எத்திராசன் என்னும் வாணிதாசன். இவரைக் குறித்து ஏற்கெனவே சில நூல்கள் வந்திருந்தாலும் நண்பர் ஆர்.வி.பதியின் இந்த நூல், கவிஞர் வாணிதாசன் சிறுவர் இலக்கியத்திற்கு ஆற்றியுள்ள சீரிய பணியை, பங்களிப்பை எடுத்துரைக்கும் விதமாகச் சிறப்பாக அமைந்துள்ளது.