கர்மவீரர் என்ற சொல் காமராஜரைக் குறிக்கும்.நம்மிடையே நமது காலத்தில் வாழ்ந்த தேசத்தலைவர்களில் காமராஜர் மிகவும் எளிமையானவர்.அவரது திட்டங்கள் அனைத்தும் பலராலும் போற்றப்பட்டவை.தமிழகத்தில் இவர் காலத்தில் கல்வி சிறப்பான முறையில் வளர்ச்சி பெற்றது.
காமராஜர் பல பெரிய பதவிகளை வகித்திருக்கிறார்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று சிறைக்குச் சென்றிருக்கிறார்.இவரது வாழ்க்கை வரலாறு இன்றைய மாணவ சமுதாயத்திற்கு மிகவும் பயன்படக் கூடிய ஒரு அரிய பொக்கிஷம்.
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றையும் தமிழகத்திற்கு அவர் செய்த செயற்கரிய செயலையும் மிக எளிய முறையில் பள்ளி மாணவர்களும் மாணவியரும் புரிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் எழுதியுள்ளேன்.இந்த நல்ல நூலை தமிழ் மக்கள் அனைவரும் படித்து பயன் பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.தமிழக மாணவச் செல்வங்கள் இந்த பயனுள்ள நல்ல நூலை நிச்சயம் படிக்க வேண்டும்.