“அவளே மகளானாள்” என்ற இந்த சமூக நாவல் முற்றிலும் ஒரு புதிய கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது. நாம் படிக்கும் செய்திகள், பார்க்கும் செய்திகள் அனைத்தும் உண்மைத்தன்மை உடையவை அல்ல. ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் வேறு சில கோணங்களும் உண்மைகளும் இருக்கும். இந்த கோட்பாடை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதே இந்த நாவல். ஒருவர் மீது கொண்ட வன்மத்தின் காரணமாக அவர்மீது சுமத்தும் வீண் பழியானது அவருடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப்போட்டு நிலைகுலைய வைக்கிறது என்பதை இந்த நாவல் எளிதில் உணர்த்தும்