“30 உயிரினங்கள் வியப்பூட்டும் தகவல்கள்” என்ற இந்த நூல் நீங்கள் இதுவரை அவ்வளவாக அறியாத விநோதமான உயிரினங்களைப் பற்றிய ஆச்சரியமான தகவல்களைக் கொண்ட நூலாகும். மூன்று இதயங்கள் கொண்ட கணவாய் மீன்கள், வாயை பனிரெண்டு மடங்கு அளவிற்கு அதிகமாக திறக்கும் ஆற்றலுடைய தவளை மீன்கள், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் கோமாளி மீன்கள், ஒரே சமயத்தில் தன் அலகால் பத்து மீன்களைப் பிடிக்கும் ஆற்றலுடைய கடல் கிளிகள் என பலப்பல வியப்பூட்டும் தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.